Pages

Sunday, September 6, 2015

யுத்த வெறி கொண்ட மேலைநாட்டு ஊடகங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றும் இலங்கையின் பிரதான பிரிவு ஊடகங்கள்

westernmediaலத்தீப் பாரூக்
சர்வதேச விவகாரங்கள் பற்றிய துணிச்சல் மிக்க கருத்துக்காக ஒரு காலத்தில் போற்றப்பட்ட உள்நாட்டின் பிரதான பிரிவு ஊடகங்கள் இன்று அமெரிக்கா தலைமையிலான யுத்த வெறி கொண்ட ஐரோப்பிய இஸ்ரேல் ஆதரவு ஊடகங்களை கண்மூடித் தனமாகப் பின்பற்றி வருகின்றன.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் மீது அமெரிக்கா தலைமையிலான மேலை நாடுகள் இழைத்து வரும் குற்றங்கள் தொடர்பாகவும் இன்னும் பல விடயங்கள் பற்றியும் ஒரு காலத்தில் உள்ளுர் ஊடகங்களில் பல துணிச்சல் மிக்க எழுத்தாளர்கள் தமது கருத்துக்களை சுதந்திரமாகத் தெரிவித்து வந்தனர். எவ்வாறாயினும் கடந்த ஒரு தசாப்த காலமாக அல்லது அதற்கும் சற்று அதிகமான காலங்களில் உள்ளுர் ஊடகங்களில் இந்தப் போக்கில் பாரிய மாற்றங்களை அவதானிக்க முடிகின்றது. மும்மொழிகளிலும் இந்நிலை காணப்படுகின்றது. இந்த ஊடகங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் அமெரிக்கா தலைமையிலான யுத்த வெறி கொண்ட ஊடகங்களின் வலையில் சிக்கியுள்ளன.
இதன் விளைவாக ஊடகங்கள் பொதுவாக மக்களுக்கு உண்மைகளைத் தெரிந்து கொள்ளும் உரிமை மற்றும் வாய்ப்பு என்பனவற்றை வழங்க மறுத்துள்ளன. அமெரிக்காஇபிரிட்டன்இஐரோப்பிய நாடுகள் மற்றும் இஸ்ரேல் என்பன முஸ்லிம் நாடுகளில் இழைத்து வரும் கொடுமைகள் கொலைகள் கற்பழிப்புக்கள் என்பன இதன் காரணமாக மறைக்கப்பட்டு வருகின்றன. 1989ல் சோவியத் யூனியன் சிதைக்கப்பட்டது முதல் இந்த நிலையை அவதானிக்க முடிகின்றது.
இதன் மூலம் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதோடு மட்டுமன்றி அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களுக்காக நாடுகளை ஆக்கிரமித்து அழித்து சின்னாபின்னப்படுத்திய யுத்தக் குற்றவாளிகளை உலகுக்கு இனம் காட்டுவதும் தடுக்கப்பட்டுள்ளது.
tony-mangalaஉதாரணத்துக்கு அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த பிரிட்டனின் முன்னாள் பிரதம மந்திரி டொனி பிளாயரின் விஜயத்தை எடுத்துக் கொள்வோம். இவர் நன்கு அறியப்பட்ட ஒரு யுத்தக் குற்றவாளி. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரில் இவர் குடும்பத்தோடு இருவார கால விடுமுறையில் இலங்கைக்கு வந்திருந்தார். லக்ஷ்மன் கதிர்காமர் வருடாந்த நினைவுப் பேருரை நிகழ்த்தவும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த அவமானத்துக்கு மேலும் மெருகூட்டும் வகையில் அவர் தனது குடும்பம் சகிதம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் சந்தித்திருந்தார்.
இந்த நிகழ்வுகளுக்கு உள்ளுர் உடகங்களின் சில பிரிவுகளில் பாரிய பிரசாரம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் அவரின் யுத்தக் குற்ற பதிவுகள் பற்றி இந்த ஊடகங்கள் அனைத்துமே மௌனம் சாதித்திருந்தன.
ஈராக் இலங்கையோடு மிகவும் நற்புறவு கொண்டிருந்த நாடு. பல சந்தர்ப்பங்களில் அது இலங்கைக்கு பல்வேறு உதவிகளையும் வழங்கியிருந்தது. ஒரு தடவை முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸ கொழும்பில் உள்ள ஈராக் தூதுவரிடம் இலங்கையில் எரிபொருள் நெருக்கடியை தீர்க்க உதவ முடியுமா என்று கேட்டிருந்தார். அவர் கேட்ட உடனேயே அப்போது இங்கிருந்த ஈராக் தூதுவர் அப்தோ அலி தாரி உடனடியாக தனது நாட்டுடன் தொடர்பு கொண்டு ஈராக் தேசிய எண்ணெய் கம்பனி மூலம் பஸ்ரா துறை முகத்தில் இருந்து ஆறு கப்பல்களில் எரிபொருள் கொண்டு வர ஏற்பாடு செய்தமை இன்னமும் என் நினைவில் உள்ளது.
இது ஒருபுறம் இருக்கட்டும் ஈராக்கின் அப்பாவி மக்கள் அமெரிக்காவுக்கோஇ பிரிட்டனுக்கோஇ ஐரோப்பாவுக்கோ அல்லது இஸ்ரேலுக்கோ எந்த வகையிலும் எந்த தீங்கும் இழைக்காதவர்கள் என்பதை நாம் இங்கு மறந்து விடக் கூடாது. ஈராக் மாபெரும் பண்டைய நாகரிகங்கள் பலவற்றை தாங்கி நிற்கும் ஒரு தேசமாகும். மொஸப்பத்தேமியாஇ சுமர்இ அக்காத்இ மொஸபடோமியன்இ பாபிலோனியாஇ அஸிரியா என யூப்பிரடீஸ் தைக்கிரீஸ் நதிகளுக்கு இடையில் 7000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாகரிகங்கள் தோற்றம் பெற்ற பூமியே ஈராக்காகும்.
டொனி பிளாயர் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் ஜுனியருடன் இணைந்து ஈராக்குக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்தார். ஈராக் பாரிய அழிவு தரும் ஆயுதங்களை வைத்துள்ளது என்றும் 40 நிமிடங்களில் அவை லண்டனைத் தாக்கும் வல்லமை கொண்டவை என்றும் கூறி தான் இந்த யுத்தப் பிரகடனம் செய்யப்பட்டது. ஆனால் ஐக்கிய நாடுகள் ஆயுதப் பரிசோதகர்களால் இன்று வரை ஈராக்கில் அவ்வாறான ஆயுதங்கள் எதுவுமே கண்டு பிடிக்கப்படவில்லை.
பொய் ஏமாற்று என்பனவற்றை பயன்படுத்தி தான் ஈராக் மீது மோசமான அழிவுகளை ஏற்படுத்தும் குண்டுகள் மழையாகப் பொழியப்பட்டன. பாரிய கனரக ஆயுதங்களும் பாவிக்கப்பட்டன. மிகவும் நவீனமான வசதிகளுடன் ஆடம்பரமாக வாழ்ந்து கொண்டிருந்த அந்த நாட்டின் அப்பாவி மக்களின் வாழ்வு முறை முற்றாக அழிக்கப்பட்டது. இருபது லட்சம் ஈராக்கியர்கள் எவ்வித காரணங்களும் இன்றி கொன்று குவிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள் கற்பழிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர். 5.9 மில்லியன் ஈராக்கியர்கள் அகதி முகாம்களுக்குள் தள்ளப்பட்டனர். இன்னும் அவர்கள் எந்த அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.
மனித குலத்துக்கு எதிரான இந்தக் குற்றங்கள் பற்றியும் கொடுமைகள் பற்றியும் பிரதான பிரிவு ஊடகங்கள் எதுவுமே இதுவரை வாய் திறக்கவில்லை. வாசகர்களை உண்மையின் பக்கம் இருந்து திசை திருப்பி யுத்தக் குற்றவாளிகளை மகிழ்ச்சி அடையச் செய்யும் இந்த விடயத்தை நாம் புத்திஜீவி மோசடி என்று குறிப்பிடலாமா?
இலங்கையின் அக்கறை அல்லது நலன் இதுதானா?
நீண்ட காலமாக உள்ளுர் ஊடகங்களில் இந்த போக்கை தான் அவதானிக்க முடிகின்றது.
உதாரணத்துக்கு கடந்த இரண்டரை தசாப்தங்களுக்கு மேலாக அமெரிக்கா பிரிட்டன் ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் என்பன பல்வேறு வடிவங்களில் பல முஸ்லிம் நாடுகளில் ஊடுறுவியுள்ளன. ஆப்கானிஸ்தான்இ ஈராக்இ லிபியாஇ சோமாலியா தற்போது சிரியா எகிப்துஇ யெமன்இ பொஸ்னியாஇ கொசோவோ என இந்த நாடுகளின் வரிசை நீண்டு செல்கின்றது. இன்னும் பல நாடுகளில் அமெரிக்க உற்பத்தியான ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம்’ என்ற பெயரில் இந்த ஆக்கிரமிப்பு நீடித்துள்ளது.
இந்த எல்லா ஆக்கிரமிப்புக்களிலும் அழிவுகளிலும் பாதிக்கப் பட்டவர்களின் துன்பங்கள் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இழைத்த கொடுமைகள்இ கொடூரங்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் ஊடகங்களால் சரியான முறையில் கோடிட்டுக் காட்டப்படவில்லை.lf-exporting war
பலஸ்தீனர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நிலப்பரப்பில் இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை ஐரோப்பிய ஏகாதிபத்தியவாத சக்திகள் ஸ்தாபிக்கின்ற வரைக்கும் உலகில் அமைதிப் பூங்காவாகக் காணப்பட்ட ஒரு இடம்தான் மத்திய கிழக்கு பிராந்தியம் என்பதை நாம் எல்லோரும் அறிவோம். புலஸ்தீன மன்னின் மைந்தர்கள் இன்றும் அந்தப் பிராந்தியத்தில் அகதி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தொடர்ந்தும் அந்தப் பிரதேசத்தில் அவர்களை அவ்வப்போது கொன்று குவித்து வருகின்றது. இதுவரை இஸ்ரேல் 65க்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் பலஸ்தீனர்களை பாரிய அளவில் கொன்று குவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தை ஒரு கொலைகளமாகவே அது மாற்றியுள்ளது.
துரதிஷ்டவசமாக இலங்கை ஊடகங்கள் தமது வாசகர்களுக்கு இது பற்றி விளக்கம் அளித்த சந்தர்ப்பங்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. இஸ்ரேலின் உண்மை முகம் இன்னமும் உள்ளுர் ஊடகங்களில் சரியாகக் காணப்படவில்லை. இதற்கு மாறாக கடந்த ஐந்தாண்டுகளாக உள்ளுர் ஊடகங்கள் பெரும்பாலும் நேரடியாகவோ அன்றி மறைமுகமாகவோ அதிகளவு இஸ்ரேல் செல்வாக்கிற்கு உட்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தவறான தகவல்களையே அவை தாங்கி நிற்கின்றன.
2013 பெப்ரவரியில் ‘அமெரிக்காவின் புதிய உலக ஒழுங்கு-யுத்தங்களை ஏற்றுமதி செய்தல்’ என்ற பெயரில் ஒரு புத்தகத்தை நான் வெளியிட்டேன். சர்வதேச நிலவரம் பற்றி தெளிவான தகவல்கள் இதில் உள்ளன.  அமெரிக்காவினதும் மேலை நாடுகளினதும்இ மேலைத்தேச கூட்டாண்மை நிறுவனங்களினதும் தேவைக்கும் நிகழ்ச்சி நிரலுக்கும் ஏற்ப உலகை யுத்த களமாக மாற்றி வரும் படைகள் பற்றி அதில் குறிப்பிட்டுள்ளேன்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரேகனின் காலத்தில் திரைசேறிக்கு பொறுப்பாக இருந்த உதவி செயலாளர் சேர் போல் கிரயிக் ரொபர்ட்ஸ்இ நோபல் பரிசு வென்ற தவக்குல் கர்மான்இ டொனி பிளாயர் அரசில் யுத்த குற்ற விடயங்கள் பற்றிய சர்வதேச விடயங்களைக் கையாண்ட கிளயர் ஷோர்ட்இ உலக மயமாக்கல் பற்றிய ஆராய்ச்சி மன்றத்தின் ஆய்வாளர் ஸ்டீபன் லண்டமன்இ மலேஷிய சமூக செயற்பாட்டாளர் சந்திரா முஸாபர்இ இந்திய எழுத்தாளரும் சமூக நல்லிணக்க செயற்பாட்டாளருமான ராம் புன்யானி ஆகியோர் அதில் தெரிவிக்கப்பட்டிருந்த கருத்துக்களை பாராட்டி வரவேற்று கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
ஒரு சாராம்ச தொகுப்புரையுடன் சகல ஆங்கில ஊடகங்களுக்கும் ஒரு பிரதியையும் நான் வழங்கியிருந்தேன். ஒரேயொரு ஊடகம் மட்டுமே அதில் இருந்து ஒரு சில பந்திகளை பிரசுரித்திருந்தது. ஏனைய எந்த ஊடகமும் இதில் இருந்து ஒரு பந்தியையேனும் பிரசுரிக்கவில்லை. ஒரு பத்திரிகையின் ஆசிரியர் அமெரிக்காவுக்கு எதிராக நாங்கள் எதையும் பிரசுரிக்கத் தயாராக இல்லை என்று நேரடியாகவே என்னிடம் கூறினார்.
இலங்கையில் உள்ள சுதந்திர ஊடகங்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஊடகங்களின் வெற்கக் கேடான நிலை இதுதான்.
உள்ளுர் அரங்கிலும் கூட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் ஊடகங்கள் பொதுவாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டிவிடும் இனவாத சக்திகளுக்கு அதிகளவு பிரசாரத்தை வழங்குவதில் கணிசமான பங்களிப்பை செலுத்துவதை அவதானிக்கத் தக்கதாக இருந்தது. இதற்கு மேலதிகமாக சிங்கள மக்களை முஸ்லிம்களுக்கு எதிராக தூண்டிவிடும் வகையில் ஊடகங்களில் காணப்பட்ட இனவாத சக்திகள் உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களுடன் கூடிய ஆக்கங்களைப் பிரசுரித்து வந்ததையும் அவதானிக்க முடிந்தது.
முஸ்லிம்களை வன்முறைகளோடும் பயங்கரவாதத்தோடும் தொடர்பு படுத்தி குற்றம் சாட்டும் வகையில் சில ஊடகங்கள் ஆக்கங்களை வெளியிட்டு வந்ததையும் நாம் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. முஸ்லிம்கள் மீதான இந்த குற்றச்சாட்டுக்களை பொலிஸ் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் மறுத்திருந்தும் கூட ஊடகங்கள் அதை விட்டபாடில்லை.
இந்த பொறுப்பற்ற ஆபத்தான கொள்கை 2014 ஜுனில் அளுத்கமை தாக்குதல் வரை தொடர்ந்தது. அளுத்கமை விடயத்திலும் உள்ளுர் ஊடகங்கள் நகைப்புக்குரியவையாகவே காணப்பட்டன. அளுத்கமை பேருவளைஇ தர்கா டவுன் ஆகிய இடஙங்களில் இடம்பெற்ற சம்பவங்களை கொழும்பில் உள்ள ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்தன.
இது உள்நாட்டின் பிரதான ஊடகங்களுக்கு பாரிய அளவில் அவப் பெயரை ஈட்டிக் கொடுத்தது. அரசாங்கத்தினதும் சிங்கள இனவாத சக்திகளினதும் கரங்களில் சிக்குண்ட ஊடகங்களாகவே அவை காணப்பட்டன.
ஆனால் கலவரங்கள் இடம்பெற்ற 2014 ஜுன் 15 மற்றும் 16 ஆகிய தினங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நேரங்கள் உட்பட ஏனைய நேரங்களிலும் இடம்பெற்ற வன்செயல்கள் மற்றும் தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் ஒவ்வொரு வினாடியும் கையடக்க தொலைபேசிகள் வழியாகவும் ஏனைய சமூக வலைதலங்கள் மற்றும் பேஸ்புக்இ டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் வழியாகவும் உலகம் முழுவதும் மக்களைச் சென்றடைந்த வண்ணம் இருந்தது. இதனால் இதை மூடி மறைக்க முனைந்த உள்நாட்டு ஊடகங்கள் மேலும் நகைப்புக்கு உரியவையாகின.
இதன் விளைவாக முஸ்லிம்கள் மீது பாரபட்சம் காட்டி இனவாத சக்திகளுக்கு ஊக்கமளித்த உள்ளுர் ஊடகங்களின் கொள்கை நகைப்புக்கும் கண்டனத்துக்கும் ஆளாகி சமூகத் தொடர்பு அற்ற ஒன்றாகவும் ஆகியது. 2014 ஜுன் 17 தொடக்கம் தான் உள்ளுர் ஊடகங்களில் பட்டும் படாமலும் தகவல்கள் வெளிவரத் தொடங்கின. ஆனால் அதற்கு முன் முழு உலகையும் முழு தகவல்களும் சென்றடைந்து விட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த மூன்றாவது தினத்தில் கூட முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளின் பாரதூரத்தை சரியான முறையில் ஊடகங்கள் வெளிக்காட்டத் தவறி விட்டன. சம்பவ இடத்தில் இருந்து எந்தவிதமான அறிக்கைகளும் பதியப்படவில்லை. ஏற்படுத்தப்பட்ட இழிவுகளைச் சித்தரிக்கும் வகையில் எந்த விதமான கட்டுரைகளும் படங்களும் பிரசுரிக்கப்படவில்லை.
இந்த நாட்டின் பிரதான பிரிவு ஊடகங்களின் வரலாற்றில் இது ஒரு வெற்கக் கேடான விடயமாகவே பதிவாகியுள்ளது. குற்றங்களை மறைத்தும் குற்றவாளிகளைப் பாதுகாத்தும் பாதிக்கப்பட்ட மக்கள் மீதே பழியைப் போட முயன்ற அரசியல்வாதிகளின் கருத்துக்களுக்கும் செய்திகளுக்கும் அதிக முக்கியத்தவம் அளிக்கப்பட்டிருந்ததையே அவதானி;க்க முடிந்தது.
ஏவ்வாறேனும் உள்ளுர் ஊடகங்களின் நயவஞ்சகத்தை அம்பலப்படுத்தும் வகையில் வெளிநாட்டு ஊடகங்கள் இந்த விடயத்துக்கு உரிய முக்கியத்தவம் அளித்திருந்தன.
உள்ளுர் ஊடகங்களில் தமக்குரிய சிறய பங்கையேனும் எதிர்ப்பார்ப்பது முஸ்லிம்களைப் பொருத்தமட்டில் மிகவும் கஷ்டமான விடயமாகவே உள்ளது. உள்ளுர் ஊடகங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான நச்சு விதைகளை சிங்கள மக்களின் சிந்தனைகளில் தூவியுள்ளன. இவ்வாறு தான் இரு சமூகங்களுக்கும் இடையிலான இன்றைய குரோத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் தான் நாட்டுக்கு தீங்கு விளைவித்த பொது பல சேனாஇ ஜாதிக ஹெல உறுமய போன்ற இனவாத சக்திகளின் உருவாக்கத்துக்கும் வழியமைத்தன.
ஒரு காலத்தில் மிகவும் பெருமையாகப் பேசப்பட்ட உள்ளுர் சிங்கள ஆங்கில ஊடகங்களின் நிலை இன்று பரிதாபகரமாக மாறியுள்ளது. ஏதோ ஒரு வகையான முஸ்லிம் எதிர்ப்பு மனநோயால் இவை பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் முஸ்லிம் சமூகம் தான் இந்த நாட்டின் மூன்று சமூகங்களிலும் மிகவும் அiதியாகவும் சமாதானமாகவும் வாழ்ந்த சமூகம். உலகில் உள்ள நாடுகளுள் முஸ்லிம் நாடுகள் தான் இலங்கையோடு மிகவும் சிநேகபூர்வமான நாடுகளாகவும் உள்ளன.

No comments:

Post a Comment