சிரியாவில் யுத்தத்தால் தம் மனைவி,உறவு, உடைமை என அனைத்தையும் இழந்த நிலையில் மீதமிருக்கும் தனது உயிரையும் தனது மகனையும் காப்பாற்றிக்கொள்ள நாட்டை விட்டு உயிர் பிச்சை கேட்டு ஐரோப்பிய எல்லைக்குள் நுழைய விடாமல் போடப்பட்டிருந்த முள் வேலியை பார்த்த தந்தை தனது மகன் பற்றிய கவலையின் அழுகுரல்..
அமெரிக்கவில் (டெக்ஸாஸ்) 14 வயது சிறுவன் - அஹமத் முகமத் தனது அபார திறமையால் உருவாக்கிய கடிகாரத்தை தனது பாடசாலையில் காட்ட எடுத்து சென்ற வேளை பொலிசாரினால் கைது. (பின்பு அமெரிக்காவின் பல பிரபலங்கள் இச்சிறுவனுக்கு சார்பாக தமது ஆதரவை வெளிக்காட்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
காசாவில் சென்ற வருடம் (2014) யூத இராணுவம் நடாத்திய கண்மூடித்தனமான தாக்குதலால் 551 சிறுவர்கள் கொல்லப்பட்டும், 1000 க்கும் அதிகமான சிறுவர்கள் நிரந்தரமாக ஊனமுற்றும் உள்ளனர்...
இவ்வாறு இளைய தலைமுறையினரை முளையிலையே கிள்ளி எறியும் பல மனதை உருக்கும் நம்மை அடையாத எத்தனையோ சம்பவங்கள் கொடூரமாக அரங்கேறிய வண்ணம் உள்ளன. இதற்காகத்தான் அரசர்களுக்கெல்லாம் அரசன் இறுதி தீர்ப்பு நாள் ஒன்றை வைத்துள்ளான். ஒருவரேனும் (ஒரு உயிரினமும்)அந்நாளில் அணுவளவேனும் அநீதி இழைக்கப் பட மாட்டார்கள்.
No comments:
Post a Comment