Pages

Wednesday, October 21, 2015

புத்தளத்தில் Area க்கு ஒரு DNA பரிசோதனை நிலையம் ..



சமூக ஊடகங்களில்  அண்மைய பதிவுகளை  பார்க்கும் போது  எந்தளவுக்கு சிறுவர் துஷ்பிரயோகம் நம் சமூகத்தில் புரையோடி போயுள்ளது என அதன் ஆழத்தையும் ஆபத்தையும் அனுமானிக்க கூடியதாக உள்ளது. இவற்றுக்கு  இறை உணர்வின்மை, போதை பொருள் பவனை, மன நோய் (சிறுவர்களோடு தமது பாலியல் தேவையை பூர்த்தி செய்ய ஆர்வம்), பெற்றோர் கவனயின்மை, கலாசார சீர்கேடு (சினிமா, தொடர் நாடகம், Smart Phone)...... 
என  பல பிரதான காரணக்களை முன் வைக்க முடியும். அண்மையில் நண்பர் ஒருவருடன் இது தொடர்பாக பேசிக்கொண்டிருந்த போதுபுதிய ஒரு காரணத்தை சிறுவர்-பெண்கள் மீதான அத்துமீறல்களுக்கு  எதிராக  செயற்பட்டுவரும் ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தின் உயர் பதவியில் இருக்கும் உத்தியோகத்தர் ஒருவர் முன்வைத்ததாக கூறினார். "தன் மனைவி பெற்ற பிள்ளை தனக்குத்தான்  பிறந்ததா ?" என்ற தகப்பனின் சந்தேகம் பல குடும்பங்களில் காணப்படுகிறதாம். இதனால் குடும்ப வாழ்வில் கணவன் மனைவிக்கு இடையில் சண்டைகளுக்கும், குழப்பங்களுக்கும் மணவிலக்குகளுக்கும்  பஞ்சமில்லாமல் போய்  விட்டதோடு பிள்ளைகள் தமது எதிர்காலத்தை இழந்து தவிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
















இவ்வாறான சந்தேகம் ஏற்பட வெளிநாட்டு மோகம், போதை பொருள் பவனை, கடன் பளு,  போன்றவற்றை அடிப்படை காரணக்களை முன்வைக்கலாம்.





தந்தை தனது பிள்ளையை கற்பழித்த கொடூர செயல்கள் முன்பெல்லாம் வேறு சமூகங்களில் இருந்தே செய்திகளினூடு கேள்விப்பட்டுள்ளோம், தற்போது அவற்றுக்கு நமது சமூகமும் விதிவிலக்கற்றவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். குடும்ப உறவை சீர்குலைக்கும் இவ்வாறான சந்தேகங்களை களைய area  க்கு ஒரு DNA  பரிசோதனை நிலையம் எதிர்காலத்தில் தேவைப்படும் போலும்..      --அபூ அய்மன் ஆரா-- 

No comments:

Post a Comment